தொழில் தொடங்குவோரில் 95% பேர் தோல்வி:நிதி ஆயோக் உறுப்பினர் வேதனை

இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்குவோரில் 95 சதவீதம் பேர் தோல்வியை சந்திப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள சர்வதேச நிர்வாகவியல் கல்வி மையத்தின் (ஐஎம்ஐ) பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற, நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தேப்ராய் புதியதாக தொழில் தொடங்குபவர்கள் குறித்து வேதனையுடன் பேசினார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டங்கள் அனைத்தும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமானதல்ல. இது ஒவ்வொரு இந்தியனுக்குமானது. மலர்ந்து, காயாகி கனிந்து பலன் கொடுப்பதாகத்தான் இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய கல்வி முறை மாணவர்கள் கேள்வி கேட்பதாக உருவாக்கப்படவில்லை. இதனாலேயே தொழில் முனைவை ஊக்குவிப்பதாக இல்லை என்ற சந்தேகம் உருவாகிறது.பெரிய நிறுவனங்களில் உள்ள தொழில் முனைவைவிட சாலையோர வியாபாரி மற்றும் விவசாயிகளிடம் அதிகம் உள்ளது. இந்தியாவின் தனி நபர் வருமானம் 1,800 டாலராகும். வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்தே தாராளமய கொள்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தியாவின் தனி நபர் வருமானம் குறித்து சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட அறிக்கையில் தனி நபர் வருமான அளவானது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள அளவில் பாதியை எட்டுவதற்கே 153 ஆண்டுகளாகும். ஆனால் சமீபத்தில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி, இதை எட்டுவதற்கு அவ்வளவு காலம் ஆகாது என்றே தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>