கூகுளை அதிகம் பயன்படுத்துவோருக்கு மறதிநோய்... எச்சரிக்கும் ஆய்வாளர்

கூகுள் உள்ளிட்ட தேடல் வளைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

உலக அளவில் டிமென்சியா எனப்படும் மறதி நோய் 4 கோடியே 70 லட்சம் பேரை பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2050-ஆம் ஆண்டில் இந்நோய்க்கு 13 கோடியே 10 லட்சம் பேர் இரையாவார்கள் என்றும் கணித்துள்ளது.

மறதி நோய்யைத் தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தியும் சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக ஆய்வாளரான பிராங்கன் மூரே இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டார்.

அதுபற்றி அவர் கூறுகையில், “மூளையின் ஆரோக்யம் முக்கியமானது. மூளைக்கு வேலை கொடுத்தால்தான் அது ஆரோக்யமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் நாம் மூளைக்கு வேலை கொடுப்பது குறைந்துள்ளது.

நமது மூளை செய்ய வேண்டிய வேலைகளை கூகுள் போன்ற தேடல் இணையதளத்தை கொண்டு செய்கிறோம். இதனால், மூளையை பயன்படுத்தி சிந்தித்து, நினைவாற்றலை அதிகரிக்காமல், இணையதளத்துக்குச் சென்று எளிதில் உரிய தகவல்களைப் பெற்றுவிடுகிறோம்.

இதனால் மூளையின் நினைவாற்றலைத் தூண்டும் கிரேசெல்கள் எனப்படும் சாம்பல் நிற செல்கள் அழியத் தொடங்குகிறது. எனவே, மறதி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

More News >>