H-4 EAD - ஹெச்-4 ஈஏடி விசா முடிவு - அதிகாரப் பூர்வ அறிவிப்பு
ஹெச்-1 பி விசாதாரர்களின் வாழ்க்கை துணைக்கு, அமெரிக்காவில் வேலை பார்க்கும் அனுமதியாடு வழங்கப்பட்டு வந்த ஹெச்-4 ஈஏடி விசா ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி இவ்வளவு நாட்களாக இருந்து வந்தது.
இம்மாதம் 11-ம் தேதி, அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை, அமெரிக்க நீதித்துறை இரண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஹெச்-4 ஈஏடி முடிவுக்கு வருவது அதிகாரப் பூர்வமாக உறுதியாகியுள்ளது.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், "குடிபுகல் செயல்பாட்டில் பாதுகாப்பு; நேர்மை கடைப்பிடிப்பு" என்ற பிரகடனத்தோடு குடிபுகல் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. தற்போது "அமெரிக்காவுக்கு வெளிநாட்டு விசா பணியாளர்களை கொண்டு வருவதன் மூலம் நிறுவனங்கள் செய்யும் போலி, ஏமாற்றும் மற்றும் பாகுபாடான செயல்பாடுகள் கடுமையாக பார்க்கப்படும்" என்ற நோக்கில் இரு துறைகளும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"தற்காலிக விசாவில் கிடைக்கும் வெளிநாட்டுப் பணியாளரை பணியிலமர்த்துவது, தகுதி வாய்ந்த அமெரிக்க பணியாளர்களிடம் பாகுபாடு காட்டுவது ஆகும்" என்ற சட்டத்தை குடிபுகல் மற்றும் பணியாளர் உரிமை பிரிவு தீவிரமாக நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்குள் வர இருக்கும் பொது தேர்தலை முன்னிட்டு இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
"ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின்போது, வெளிநாட்டு பணியாளர்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட அமெரிக்க பணியாளர்களின் நலனுக்காக 2 லட்சம் டாலர்களை செலுத்த முன்வந்திருப்பதாகவும், போலி மற்றும் ஏமாற்றும் செயல்பாடுகளின் மூலம் வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை தீவிரமாக கண்காணிக்க ஏனைய அரசு துறைகளும் இணைந்து செயல்படும்" என்று டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
அதிகாரப் பூர்வ அறிவிப்பின் மூலம் ஹெச்-4 ஈஏடி குறித்து இருந்ததான சிறிதளவு நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com