ஸ்டார்பக்ஸ் பொது கழிப்பறையல்ல - என்ன சொல்கிறது நிர்வாகம்?

"ஸ்டார்பக்ஸ் பொது கழிப்பறையாவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும், யாரும் மற்றவர்களை விட தங்களை கீழாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக வாடிக்கையாளர்களைப் போல மற்றவர்களும் ஸ்டார்பக்ஸின் கழிப்பறையை பயன்படுத்த அனுமதி உண்டு" என்று ஸ்டார்பக்ஸ் சேர்மன் ஹோவர்ட்ஸ் ஸ்கல்ட்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, பிலடெல்பியா ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் கழிப்பறையை பயன்படுத்த முயன்ற இரு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், அங்கு எதுவும் வாங்காமல் நெடுநேரம் காத்திருந்ததாக கூறி, உணவக மேலாளர் காவல்துறையிடம் புகார் அளித்தார். ஸ்டார்பக்ஸில் இனப்பாகுபாடு இருப்பதாக பெரிய சர்ச்சை எழுந்தது.

ஸ்டார்பக்ஸ் பணியாளர்களுக்கு இனப்பாகுபாட்டை தவிர்ப்பது குறித்த பயிற்சி மே மாதம் 29-ம் தேதி நடத்தப்படுவதாகவும், அன்று பிற்பகல் அனைத்து ஸ்டார்பக்ஸ் உணவகங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"முன்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கழிப்பறையை பயன்படுத்தும் வசதி உண்டு என்ற கொள்கை ஸ்டார்பக்ஸில் இருந்தது. ஆனாலும், அது குறித்து குறிப்பிட்ட கிளையின் மேலாளர் எடுக்கும் முடிவே இறுதியானது. இப்போது, வாடிக்கையாளர்கள் இல்லாதவர்களையும் ஸ்டார்பக்ஸ் வரவேற்கிறது," என்று வர்த்தக தலைமைத்துவ விருது ஒன்றை பெறுவதற்காக வந்திருந்த ஹோவர்ட்ஸ் ஸ்கல்ட்ஸ் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>