கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்! கோலிவுட் டூ ஹாலிவுட்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது ஹாலிவுட் திரைப்படத்தின் திரையிடலுக்காக தனது முதல் ஹாலிவுட் வருகையை நடிகர் தனுஷ் பதிவு செய்துள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனது பிஸியான நேரத்திலும் ‘காலா’ ஆடியோ ரிலீஸ் மூலம் தனது தயாரிப்பாளர் பரிணாமத்தையும் சிறப்பாகவே செய்து வருகிறார்.

’காலா’ ஆடியோ ரிலீஸ் முடித்தக் கையோடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகப் பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுள்ளார் நடிகர் தனுஷ்.

கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் இரண்டு படங்களை நடித்து முடித்த நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் கரியரில்  மிக முக்கியமான திரைப்படமாக  இப்படம் அமையவுள்ளது.

இத்திரைப்படத்தின் திரையிடலை முன்னிட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது முதல் வருகையைப் பதிவு செய்துள்ளார் நடிகர் தனுஷ்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>