செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர்: விரைவில் அனுப்புகிறது நாசா

செவ்வாய் கிரகத்துக்கு முதல் முறையாக ஹெலிகாப்டரை அனுப்ப அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா முடிவு செய்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா ? உயிரினங்கள் ஏதேனும் இருக்கிறதா ? போன்ற பல்வேறு ஆராய்ச்சிகளை அமெரிக்க விண்வெறி ஆராய்ச்சி மையமான நாசா மேற்கொண்டுள்ளது. தற்போது, செவ்வாய் கிரகத்திற்கு முதல் முறையாக ஹெலிகாப்டர் அனுப்பி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 4 ஆண்டுகளாக நாசா உழைத்து சிறிய அளவிலான 1.8 கிலோ எடையில் ஹெலிகாப்டரை வடிவமைத்து உள்ளனர். இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் பறப்பதற்கு ஏற்றதுபோல் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நாசா நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் கூறியதாவது: பூமியில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு ஹெலிகாப்டரை பறக்கவிடுவது என்பது பெரிய விஷயம். நமது வருங்கால அறிவியல், கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டங்களை உறுதி செய்ய இந்த ஹெலிகாப்டர் உதவும். இந்த ஆளில்லா ஹெலிகாப்டருக்கு ட்ரோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் பூமியில் இருந்து ஐந்தரை கோடி கி.மீ., தொலைவுக்கு பறக்கும். இதனால், 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ரோவருடன் அனுப்பப்படும இந்த ஹெலிகாப்டர் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்று அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>