ருசியான தேங்காய்thinspகோழிthinspவறுவல் ரெசிபி..

இன்னைக்கு சண்டே.. ஸ்பெஷலா ஏதாவது சமைக்கணும்ல.. இதோ உங்களுக்கான ருசியான தேங்காய் கோழி வறுவல் ரெசிபி  எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.. 

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ, பெரிய வெங்காயம் - 100 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம்,பூண்டு - 5 பல்,இஞ்சி - 1 துண்டு, தக்காளி - 2, பச்சைமிளகாய் - 5, தேங்காய் - 1 துண்டு, கிள்ளிய காய்ந்தமிளகாய் - 30 கிராம்,தனியாத்தூள் - 20 கிராம், சீரகம் - 20 கிராம், சோம்பு - 10 கிராம், மிளகு - 10 கிராம், பட்டை - 1 துண்டு, ஏலக்காய் - 3, கிராம்பு - 5, தேங்காய் எண்ணெய் - 200 மி.லி., நெய் - 50 மி.லி., கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு.

செய்முறை :

சிக்கனை 30 கிராம் அளவில் நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சி பூண்டை மிகப்பொடியாக நறுக்கவும்.

தேங்காயை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, காய்ந்தமிளகாய், தேங்காய், இஞ்சி, பூண்டு, முழு சின்ன வெங்காயம், தக்காளி, சிக்கனை போட்டு கிளறவும்.

சிக்கன் வெள்ளை நிறம் வந்ததும் மசாலா பொடி வகைகள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கிளறவும். தண்ணீர் முழுவதும் வற்றி வறுவலாக வந்ததும் இறக்கி, நெய், கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>