திலகர் தீவிரவாதத்தின் தந்தை- சர்ச்சைக்குள்ளான பாடப்புத்தக வரிகள்

ராஜஸ்தான் மாநில எட்டாம் வகுப்பு வரலாறு புத்தகத்தில், திலகர் ‘தீவிரவாதத்தின் தந்தை’ என அழைக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசின் பாடப்புத்தகத் திட்டமும் அச்சுப்பதிப்பும் ஹிந்தியில் மட்டுமே வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகள் அரசுப் பாடப்புத்தகத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு பிரதிகளை தனியார்களிடம் இருந்து பெறுகின்றன.

அதில் ஏற்பட்ட குளறுபடியால் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஆங்கில வழிக் கல்வியில் எட்டாம் வகுப்பு பயிலும் அத்தனை மாணவர்களுக்கும் தவறான வழி காட்டப்பட்டுள்ளது. அந்த எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ’18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் தேசிய இயக்கங்கள்’ என்ற தலைப்பில் உள்ள பாடத்தில் தவறான முறையில் வரலாரு அச்சாகியுள்ளது.

அதாவது, அப்பகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், “தீவிரவாதத்தின் தந்தை’ என அழைக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்ட போது சுதந்திரத்துக்காகப் போராடிய மக்களை மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரித்து கவனித்தது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மிகத் தீவிரமாக செயல்படும் அனைவரும் தீவிரவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதாவது ஆங்கிலத்தில், ‘எக்ஸ்ட்ரிமிஸ்ட்’ என்பதை நேரடி தமிழ்ச் சொல்லாடல் மூலமாக திலகர் ஒரு தீவிரவாதத்தின் தந்தை என மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பதுதான் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>