மேற்குவங்கத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது
பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, மேற்குவங்கத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் காலியாக இருக்கும் 38,605 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், ஏற்கனவே மே 1, 3, 5 ஆகிய தேதிகளில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம் தேர்தல் நடத்துவது தொடர்பாக தலையிட்டது. இதனால், உள்ளாட்சி தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று மேற்கு வங்க மாநிலத்தில் 58 ஆயிரத்திற்கும் அதிகமான உள்ளாட்சி பதவிகளில், 38,605 பதவிகளுக்கு தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 3358 கிராம பஞ்சாயத்துகளில் 16,814 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை. 341 பஞ்சாயத்து சமிதிகளில், 3059 இடங்களில் யாரும் போட்டியிடவில்லை. அதனால், இந்தப்பகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெறாது. மீதமுள்ள 621 ஜில்லா பரிஷத், 6157 பஞ்சாயத்து சமிதிகள், 31827 கிராம பஞ்சாயத்துகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலையட்டி வாக்குப்பதிவுகள் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com