தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியா தான் தொடர்ந்து முதலிடம்
ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தியது. இதில், தொடர்ந்து இந்தியா தான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்று அறிவித்துள்ளது. அப்படி எதுல தான் முதலிடம் என்று கேட்கிறீர்களா ?
அமெரிக்கா, துபாய், சிங்கபூர் உள்பட பல்வேறு நாடுகளுக்கு தாய் நாட்டில் இருந்து ஏராளமானோர் வேலைக்குச் செல்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து தாய் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு மாதம்தோறும் பணம் அனுப்புகின்றனர்.
இதுதொடர்பாக, இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரெமிட் ஸ்கோப் என்ற அமைப்பு ஒன்று ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இதில், வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தாயகத்திற்கு ரூ.4.65 லட்சம் கோடியை அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். இது, கடந்த 2016ம் ஆண்டை விட 9.9 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
மேலும், இந்தியாவை தொடர்ந்து, ரூ.4.30 லட்சம் கோடியுடன் சீனா 2வது இடத்திலும், ரூ.2.22 லட்சம் கோடியுடன் பிலிப்பைன்ஸ் 3வது இடத்திலும் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com