சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் - திவாகரன்
ஒரு தலை பட்சமாக நோட்டீஸ் அனுப்பிய சசிகலாவை இனி சகோதரி என அழைக்கமாட்டேன் என அவரது சகோதரர் திவாகரன் உறுதி ஏற்றுள்ளார்.
பெயரை, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என சகோதரன் திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கடந்த இரு தினங்களாக மெளனமாக இருந்த திவாகரன் இன்று வாய்திறந்து விளக்கம் அளித்துள்ளார். இந்த விஷயத்தில் ஒரு தலைபட்சமாக செயல்படும் சசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்
“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சசிகலாவுக்கு எதிராக திருப்பியவர் தினகரன். சிறையில் இருக்கும் சசிகலாவின் புகழை கெடுக்கும் வகையில் தினகரன் செயல்படுகிறார்" என்றார் திவாகரன்
மேலும், "இது போன்று என்ன இடையூறு அளித்தாலும், அதனை முறியடித்து தொடர்ந்து செயல்படுவோம். இதனால் எங்கள் அரசியல் நின்று விடாது. அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுவோம்" என திவாகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சசிகலா குடும்ப உறவினர்களிடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com