அமெரிக்காவில் பயங்கரம்: தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் பலி
அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
காங்கோ பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து வசித்து வந்தனர். அவர்கள் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தனர். இந்நிலையில், அந்த வீட்டில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் தீயணைப்பு வீரர்களுடன் விரைவதற்குள் தீ மளமளவென பரவியது.தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், கட்டிடத்தற்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில், இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com