ஜி.வி.பிரகாஷின் செம படத்தின் டிரைலர் ரிலீஸ்..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்துள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் ‘செம’ என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அர்த்தனா ஜோடிபோட்டுள்ளார்.
இவர்களை தவிர, யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை, லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன், இயக்குனர் பாண்டிராஜின் பசங்க புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
வரும் மே, 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் முதல் டிரைலர் ஏற்கனவே ரிலீஸ் செய்த நிலையில், தற்போது, இரண்டாவது டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். செம படத்தின் டிரைலர் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.
செம படத்தின் டிரைலர் இதோ..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com