1000 வாக்குறுதிகளுடன் களத்தில் சந்திக்கிறேன். ஜூலியின் புதிய வீடியோ
அரசியல் கட்சி தொடங்கப்போவதாக வீடியோ வெளியிட்ட ஜூலி தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம், பிரபலமானவர் ஜூலி. இதன் பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தை ஆட வைத்தவர் இவர். பெரும்பாலும் வெறுப்பை சம்பாதித்த ஜூலிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே, அவர் அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்கே நெட்டிசன்கள் கொந்தளித்து ஜூலியை கலாய்த்து வரும் நிலையில், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அந்த வீடியோவில், அன்னையர் தினம் வாழ்த்துகளை தெரிவித்த ஜூலி, “ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்.. எல்லோர் வீட்டுளையும் இலவச வாஷிங் மிஷின், ஏசி, குழந்தைகளுக்கு உயர்த்தர கல்வி.. உயர்த்தர மருத்துவம்.. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? என கேட்காத நாம், அடுத்த தேர்தலில் இதை செய்வேன், அதை செய்வேன் என கூறும் அரசியல்வாதிகளை நம்பி, அவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறோம்.
நானும் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன். 1000 வாக்குறுதிகளுடன் களத்தில் சந்திக்கிறேன் ” என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் ஜூலியை மரணமாக கலாய்த்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com