கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: வாக்குகள் எண்ணும் பணி தீவிரம்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளம் காங்கிரஸ் கட்சி சார்பில் சித்தராமையா, பாஜக சார்பில் எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் குமாரசாரி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதியில் 222 தொகுதிகளுக்கு அன்று தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டது.தேர்தல் வாக்குப்பதிவு முடிவில் மொத்தம் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில், தேர்தலில் பதிவாகன வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதற்காக, பெங்களூருவில் 5 மையங்கள், சித்ரதுர்கா, தென்கனரா, மைசூரு மாவட்டங்களில் தலா இரண்டு மையங்கள், துமகூரு மாவட்டத்தில் மூன்று மையங்கள் என மொத்தம் 38 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்ட வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் 9 ஆயிரத்து 300 அதிகாரிகள், 1860 கூடுதல் உதவியாளர்கள் உள்பட 11 ஆயிரத்து 160 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் பிரச்னை ஏதும் நடைப்பெறாமல் இருக்க மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் போலீசார் மற்றும் கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com