அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மனைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவமையத்தில் திங்களன்று மெலனியா ட்ரம்ப்புக்கு சிறுநீரக சிகிச்சை அளிக்கப்பட்டது. 'தேவையற்ற வளர்ச்சி அல்லது கட்டிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுப்பதற்கான சிகிச்சை' 48 வயதான மெலனியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
'மெலனியாவுக்கு அளிக்கப்பட்டது பயப்படத்தக்க சிகிச்சை அல்ல. இன்னும் ஒரு வாரம் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்' என்று செய்தி குறிப்பொன்று தெரிவிக்கிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com