கால்களை இழந்த ரசிகருக்கு ரஜினி செய்த உதவி!
ரயில் விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த, மதுரையைச் சேர்ந்த ரசிகர் ஒருவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
மதுரை திருநகரைச் சேர்ந்தவர் காசி விஸ்வநாதன். அவருக்கு வயது 33. சில தினங்களுக்கு முன்னர் இவர் சென்னையிலிருந்து மதுரைக்கு ரயிலில் சென்றபோது படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
இந்த விபத்தில் ஒரு கால் துண்டானது. மிகவும் அடிபட்டு குணப்படுத்த முடியாத நிலையில் இருந்த அவரது இன்னொரு கால் அகற்றப்பட்டது.
தற்போது சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் காசி விஸ்வநாதன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவல் அறிந்த ரஜினிகாந்த், ரசிகரை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அவரது குடும்பத்தினற்கு ஆறுதல் கூறிய ரஜினி உரிய நிதியுதவி வழங்கினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com