கேன்ஸ், பாரீஸ்...தனுஷுக்கு பிரான்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பு!
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் தனுஷுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
’காலா’ ஆடியோ ரிலீஸ் முடித்தக் கையோடு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகப் பிரசித்தி பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றுள்ளார் நடிகர் தனுஷ்.
கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டில் இரண்டு படங்களை நடித்து முடித்த நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட்டில் 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷின் கரியரில் மிக முக்கியமான திரைப்படமாக இப்படம் அமையவுள்ளது.
இத்திரைப்படத்தின் திரையிடலை முன்னிட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது முதல் வருகையைப் பதிவு செய்துள்ளார் நடிகர் தனுஷ். நேற்றைய திரையிடலில் நடிகர் தனுஷ் சிவப்பு கம்பளத்தில் உற்சாகமாக நடந்து வந்தார். மேலும், தனது ஹாலிவுட் திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு உற்சாக நடனமும் ஆடினார்.
தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவை நிறைவு செய்துவிட்டு பாரிஸ் செல்கிறார் நடிகர் தனுஷ். தனது ஹாலிவு திரைப்படக் குழுவுடன் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக உலகம் சுற்றி வருகிறார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com