சோனியா, ராகுல் பிரச்சாரம் எடுபடவில்லை - தமிழிசை
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எடுபடாததால்தான் கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதை தொடர்ந்து, அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். ஆங்காங்கே இசை கருவிகள் இசைத்தும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலும், கொண்டாட்டம் நடந்தது.
கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் பேசிய அவர், கர்நாடகாவில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பிரச்சாரம் எடுப்படவில்லை என்று கூறினார்.
மேலும், கர்நாடகாவிடம் பேசி தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தருவோம் என தமிழிசை உறுதி அளித்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com