4 லட்சத்துக்கு மேல் கல்விக்கடன் கிடையாதா..? சிக்கலில் மாணவர்கள்!
கல்விக்கடனுக்காக மாணவர்கள் நான்கு லட்சம் வரையில் தான் பெற முடியும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு வரவேண்டிய கல்விக்கடனை உடனடியாக வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுதொடர்பான வழக்கு விசாரனையில், மருத்துவ மாணவியின் இளநிலை கல்விக்கான நிதிச்செலவு சுமார் 64 லட்சம் ரூபாய். ஆனால், கல்விக்கடன் விதிமுறையின் அடிப்படையில் மாணவர்களுக்கு இளநிலைக்கான கல்விச்செலவாக 4 லட்சம் ரூபாய் தான் ஒதுக்கப்படும் என்பது விதிமுறையாகக் கூறப்படுகிறது.
கல்விச்செலவு 4 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடுதல் செலவுகள் மாணவர்கள் தங்களது சொந்த செலவில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கலை, அறிவியல் இளநிலைக் கல்விச் செலவுகளுக்கு போதிய கல்விக்கடன் கிடைக்கிறது. ஆனால், பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க கல்விக்கடன் குறித்த மாணவர்களின் கேள்விகள் வெறும் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com