கூட்டணியில் காங்கிரஸ்! பாஜக-வுக்கு கல்தா...கர்நாடகாவில் ட்விஸ்ட்!

கர்நாடகா தேர்தல் முடிவுகளில் ஒரு புது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கணித்தது போலவே 222 தொகுதிகளில் முடிவுகள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாஜக, சுமார் 106 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 75 தொகுதிகளிலும், மஜக 39 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவை ஜனதா தளம் ஏற்றுக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை ஏற்றுக்கொண்டுள்ள குமாரசாமி இதுதொடர்பான அறிக்கையை இன்று மாலை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளார்.

இதன் அடிப்படையில் குமாரசாமி கர்நாடகாவின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும் காங்கிரஸ் சார்பில் இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவியேற்பர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>