`கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பாஸ்!- கர்நாடக மந்திரிகளுக்கு கேரள அழைப்பு
கர்நாட தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அங்குள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது கேரள அரசின் `கேரளா டூரிஸம்’.
கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.
இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்துள்ளன. இதையடுத்து, மஜக-வின் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள அரசு நிர்வகிக்கும் `கேரளா டூரிஸம்’ தனது ட்விட்டர் பக்கத்தில், `கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட ட்விஸ்ட்டுகளுக்குப் பிறகு எம்.எல்.ஏ-க்கள் சோர்வடைந்திருப்பர்.
எனவே, அதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் அழகும் பாதுகாப்பும் கொண்ட எங்கள் மாநில ரெசார்ட்டுகளில் ஓய்வெடுக்க அழைக்கிறோம்’ என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com