ப்ளஸ் 2 தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி: இம்முறையும் மாணவிகள் சாதனை

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ப்ளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், 91.1 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 1ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 8.66 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் 74 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும்பணி நடைபெற்றன. இதன்பிறகு, மே 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டன. அதன்படி, இன்று காலை 9 மணியளவில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள மாணவர்கள் www.tnresults.nic.in,www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in.  ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.இதைதவிர, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து எஸ்.எம்.எஸ் மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது: ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 91.1 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், 87.7 % மாணவர்களும், 94.1 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில், மாவட்ட வாரியாக, விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97 சதவீதம் மாணவர்களும், ஈரோட்டில், 96.3 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் சுமார் 1905 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கூறினார்.

மேலும், விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டல்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளிகள் வழியாகவுமு தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் நாளை முதல் மே 19 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>