பென்ஷன் பெற ஆதார் கட்டாயம் இல்லை: மத்தய அரசு அறிவிப்பு

பென்ஷன் பணம் வாங்குவதற்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை என மத்தியப் பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று தன்னார்வ நிறுவனங்களில் 30வது நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: வங்கிக்கு செல்லாமல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆதார் எண் இணைப்பு, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு வங்கி கணக்குடன் இணைக்கப்படாதது ஆகியவற்றால் சில ஊழியர்களுக்குகு பென்ஷன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாக தகவல்கள வெளியாகி உள்ளது. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் பென்ஷன் பெற ஆதார் கட்டாயம் இல்லை.

நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாகவும், பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்ப்டடுள்ளது. நிரந்தர மருத்துவ உதவித் தொகை மாதத்துக்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ரூ.4500ல் இருந்து ரூ.6750ஆக உயர்த்தப்ப்டடுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>