தமிழக அரசு கோரிக்கை - காவிரிவிவகாரத்தில் பணிந்தது மத்திய அரசு

வரைவு செயல் திட்ட குழுவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல் திட்ட அறிக்கை தொடர்பாக, தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் கருத்து தெரிவித்தது.

காவிரி விவகாரத்தில் செயல்திட்ட குழுவுக்கு மத்திய அரசு வழிகாட்டக் கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் வாதம் செய்தன. அது தவிர, வரைவு செயல் திட்ட குழுவின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும், அந்த குழுவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கையை முன் வைத்தது.

மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை கேட்டறிந்த நீதிபதிகள், வாரியத்தின் அனுமதியின்றி காவிரி படுகையில் தமிழகமோ, கர்நாடகமோ எந்த அணையும் கட்டக் கூடாது, ஏற்கெனவே இருக்கும் அணைகளில் மாற்றம் செய்வதற்கு வாரியத்தின் அனுமதி பெற வேண்டும் என தமிழக, கர்நாடக அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>