பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மகனை மேளத்தாளத்துடன் வரவேற்ற தந்தை
மத்திய பிரதேசத்தில் தேர்வில் தோல்வியடைந்த மகனுக்காக விழா கொண்டாடிய தந்தையின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேகத்தில் சமீபத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், 10ம் வகுப்பு தேர்வில் 34 சதவீத மாணவர்களும், 12ம் வகுப்பு தேர்வில் 32 சதவீத மாணவர்களும் தோல்வியடைந்தனர்.
இதன் எதிரொலியாக, மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நம் வீட்டிலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று அஞ்சிய அம்மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர், தனது மகன் நான்கு பாடங்களில் தோல்வியடைந்த நிலையிலும் அதை பொருட்படுத்தாமல் மேளத்தாளங்களுடன் கொண்டாடினார். இந்த நிகழ்வு அனைவரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
முதலில் தனது மகனை மேளத்தாளங்களுடன் பட்டாசு வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்த தந்தை மகனுக்கு பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியடைய செய்தார். பிறகு, அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகனை உற்சாகப்படுத்தினார்.
மகன் தோல்வியடைந்தும் தான் இதுபோன்று கொண்டாடுவதற்கு காரணம் உண்டு என்று சொல்லும் தந்தை, சிறு வயதில் இருந்து இது தான் அவன் சந்திக்கும் முதல் தோல்வி. இது எனது மகனின் மன உறுதியை சிதைத்துவிடக் கூடாது. இது தான் கடைவு தேர்வல்ல என்பது அவனுக்கு புரிய வேண்டும். வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் அவனுக்கு வர வேண்டும். அதற்காகத் தான் இந்த கொண்டாட்டம்.
இதற்கு மேல் என் மகனுக்கு படிப்பதில் ஆர்வம் இல்லை. அதனால், நான் செய்யும் தொழிலையே அவனுக்கு கற்றுக் கொடுக்கப்போகிறேன் என்றார் மன உறுதியுடன்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com