பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது
பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இறைவனுக்காக ஒரு மாதம் விரதம் கடைப்பிடித்து இறையருளை பெரும் நாளாக ரம்ஜானம் கொண்டாடப்படுகிறது.
ரம்ஜாம் நோன்பு தொடங்குவதற்கான பிறை நேற்று இரவு தெரிந்தது. இதுகுறித்து தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார். இதைதொடர்ந்து, இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது.
இன்று முதல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் இருந்து, தவறாமல் பள்ளி வாசலுக்கு சென்று வழிப்படுவர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com