நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை என்றும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு நாள்களாக உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது.

பெட்ரோலியப் பொருள்களின் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து பலவாறு கண்டனக் குரல்கள் எழுந்தாலும் மத்திய அரசு எதையும் கண்டுகொள்வதாக இல்லை.

தினமும் காலை 6 மணிக்கு அந்த நாளுக்கு உரிய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்றைய ஒரே இரவில் சென்னையில் பெட்ரோல் விலை 24 பைசா வரையில் உயர்ந்துள்ளது.

இதுவரையில் இல்லாத உச்சபட்ச விலையேற்றமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 78.16 ரூபாயாக உள்ளது. மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 83.16 ரூபாயாக உள்ளது. டெல்லியில் 75.32 ரூபாயாக உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்வதாலும் இதுபோல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டேதான் போகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>