இந்திய அணி சுயநலமானது!- மார்க் வாக் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி சுயநலத்துடன் செயல்படுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சர்வதேச அளவில் மிகப்பெரும் அவப்பெயரை சம்பாதித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் விளையாட்டு என்றாலே ஆஸ்திரேலியாதான் என்ற நிலை மாறி சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி.

இந்நிலையில், இந்திய அணியை தொடர்ந்து பகலிரவு ஆட்டத்தை ‘பிங்க் பந்து ஆட்டம்’ முறையில் விளையாட ஆஸ்திரேலியா வலியுறுத்தி வந்தது. ஆனால், “எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எங்கள் அணி தற்போதைக்கு எந்தவொரு பகலிரவு ஆட்டமும் விளையாடது” என இந்திய அணி மறுத்துவிட்டது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் கூறுகையில், “இந்திய அணி சிறந்த பந்துவீச்சாளர்களையும் பேட்ஸ்மேன்களையும் கொண்ட ஒரு அணி. அவர்களிடம் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக உள்ளனர்.

இந்த மாதிரியான ஒரு அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மேம்படுத்துவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். அதை விடுத்து பகலிரவு ஆட்டத்துக்கு மறுப்பு சொல்வது அந்த சுயநலத்தைக் காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>