இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்- ஐநா சபை தகவல்

இந்தியாவின் நகர்ப்புற கட்டமைப்பு அபரிமிதமான வளர்ச்சியை எட்டும் என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐநா சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத் துறை சார்பில் உலக நாடுகளின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி குறித்த மேம்பாடு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில், சர்வதேச அளவில் இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சி 2050-ம் ஆண்டு அபரிமிதமாக இருக்கும் என ஐநா சபையின் அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவின் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் 30 ஆண்டுகளில் நகர்ப்புறங்களின் வளர்ச்சியே அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேபோல், சர்வதேச நாடுகளுக்கான ஒப்பீட்டு முறையில் இந்தியாவுக்கு நிகராக சீனா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் வளர்ச்சியும் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் அதிக மக்கள்தொகை நிறைந்த நகரமாக டோக்யோ உள்ளது. இந்நகரில், 37 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், வருகிற 2028-ம் ஆண்டுக்குள் இந்த இடத்தை டெல்லி பிடித்துவிடும் என ஆய்வு கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>