கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததும் வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா விவசாயிகளுக்கு ரூ.56 ஆயிரம் கோடி வங்கி கடன்களை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்தைப்போட்டு பணியை தொடங்கினார்.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. 104 தொகுதிகளில் பாஜக வெற்றிப்பெற்றதை அடுத்து, முதல்வர் வெட்பாளராக போட்டியிட்ட எடியூரப்பா ஆளுநரின் அழைப்பை ஏற்று முதல்வர் பதவியை இன்று ஏற்றார்.எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் தலைமைச் செயலகம் வந்த எடியூரப்பா, ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து தனது முதல் கையெழுத்தைப் போட்டு பணியைத் தொடங்கினார்.
இதன்மூலம், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5000 ரூபாய் முதல் 1 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள தள்ளுபடி செய்யப்படும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com