`மோடி பிடியில் காங்,. எம்.எல்.ஏ - வழக்குகளை தோண்டும் மத்திய அரசு

எடியூரப்பா, கர்நாடகாவில் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்று இன்னும் சில மணி நேரங்கள் கூட கடக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கர்நாடகாவில் தேர்தல் நடந்த 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்- மஜத கூட்டணி வைத்தன. மஜத தலைவர் குமாரசாமி, முதல்வராக பொறுப்பேற்க ஆளுநரிடம் விண்ணப்பம் கொடுத்தார். அதேபோல பாஜக-வின் எடியூரப்பாவும் கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இறுதியில் கவர்னர், எடியூரப்பாவுக்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா, இன்னும் 2 வாரங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகின்றனர் என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடும் என்று பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதை உறுதிபடுத்தும் வகையில் குமாரசாமி, `அரசாங்க இயந்திரத்தை மோடி தலைமையிலான அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது. எங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்களை அவர்கள் அச்சுறுத்துகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ஆனந்த் சிங், `அமலாக்கத்துறையில் எனக்கு எதிராக இருக்கும் வழக்கை வைத்து என்னை பாஜக-வினர் மிரட்டுகின்றனர். என்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு ஆதரவு அளிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’ என்று இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ என்னிடம் கூறினார்’ என்று பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இன்று கர்நாடக சட்டமன்ற வாயிலில் சித்தராமையா தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸின் ஆனந்த் சிங் மட்டும்தான் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனந்த் சிங் குறித்து காங்கிரஸின் டி.கே.சுரேஷ் கூறுகையில், `ஆனந்த் சிங்கைத் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களும் இன்று தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர் மோடியின் கிடுக்குப்பிடியில் சிக்கித் தவிக்கிறார்’ என்று பாஜக மீது குற்றம் சுமத்தினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>