மூன்று மாதத்திற்கு முன் கிரீன்கார்டு வாங்கினீர்களா? திருப்பிக் கொடுக்க வேண்டும்

2018 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அமெரிக்க நிரந்தர குடியுரிமைக்கான 'கிரீன்கார்டு' பெற்றுள்ளவர்கள் 20 நாட்களுக்குள் தங்கள் கிரீன்கார்டை 20 நாட்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிபுகல் துறை அறிவித்துள்ளது.

இக்கால கட்டத்தில் விநியோகிக்கப்பட்ட கிரீன்கார்டுகளில் எந்ந நாள் முதல் குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்ற விவரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறாக அச்சாகியுள்ளதாகவும், 8,543 கார்டுகளில் இந்தத் தவறு நேர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பதற்கான நிபந்தனைகளை நீக்கக்கோரி, ஐ-751 விண்ணப்படிவம் சமர்ப்பித்துள்ள அமெரிக்க பிரஜைகளின் வாழ்க்கைதுணைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அல்லது அவர்களது சட்ட ஆலோசகர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் கிடைத்த 20 நாட்களுக்குள், தபால் கட்டணம் செலுத்தப்பட்ட உறையில் வைத்து திருப்பி அனுப்பவோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள அமெரிக்க குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கவோ வேண்டும்.

இது எந்தவகையிலும் அவர்களின் சட்டப்பூர்வமான குடியுரிமையை பாதிக்காது என்றும், 15 நாட்களுக்குள் அவர்களுக்கு வேறு கார்டுகள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த விவரங்களை (800) 375-5283 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>