குடிநீரில் உள்ள விஷத்தன்மையை நீக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு
நாம் அன்றாட பயன்படுத்தும் குடிநீரில் உள்ள ஆர்சனிக் என்ற விஷத்தன்மையை நீக்கும் புதிய கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளனர்.
70% தண்ணீரால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் வெறும் 2.5% தண்ணீர் மட்டுமே தூய்மையானதாகவும் மீதமுள்ள தண்ணீர் உப்பு தண்ணீராக உள்ளது.
இதில், நாம் அன்றாடம் பயன் படுத்தும் குடிநீர் பல பரிசோதனைகளுக்கு பிறகே நாம் குடிப்பதற்கு கிடைக்கிறது. ஆனால், மேற்கு வங்காளத்தில் இப்படி பல கிராமங்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஆர்சனிக் எனும் ஒரு வித வேதியல் பண்பு கொண்ட தனிமத்தை கொண்டதாக இருக்கிறது.
ஆர்சனிக் என்பது,வேதியல் பண்பு கொண்ட தனிமமாகும். எலிகள், ஆடுகள், கோழிகள், போன்ற சில உயிரனங்கள் ஆர்சனிக்கை ஒரு உணவு பொருளாக பயன்படுத்தி வருகிறது. அதுவே அதிகமாகும் போது விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் ஆர்சனிக் கலந்து இருப்பதால் மக்கள் இதனை பருகுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். அது நீரில் உள்ள ஆர்சனிக் எனும் இந்த வேதியல் பொருளை நீக்கி நல்ல நீராக மாற்றி தரும் திறன் கொண்டது.. அதற்கு ஆர்சனிக் சென்சார் மற்றும் ரிமோவர் மீடியா என்று பெயர் வைத்துள்ளனர்.
நீரில் ஆர்சனிக் உள்ளதா என்பதை முதலில் கண்டறியும் இந்த கருவி அப்படி இருந்தால் அதனை நீக்கி நீரை தூய்மையானதாக மாற்றும்.
இந்த கருவியில் உள்ள சென்சார் ஆர்சனிக் மீது படும் போது தண்ணீரின் நிறம் மாறும், அப்படி ஆர்சனிக் இருப்பின் அதன் அளவு கண்டுபிடிக்கப்பட்டு அதனை நீக்கும்.பின்னர் ஆர்சனிக் இல்லாத தூய்மையான தண்ணீராக மாற்றும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com