ஆப்கானிஸ்தான் ராணுவ வீராங்கணைகளுகக்குnbspஇந்திய ராணுவம் முதல்முறையாகnbspபயற்சி
சென்னை: ஆப்கானிஸ்தான் ராணுவ வீராங்கணைகளுக்கு இந்தியா முதல் முறையாக சென்னையில் உள்ள ராணுவ முகாமில் பயிற்சி அளித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் கானி இந்தியா வந்திருந்தார். அப்போது, இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவதாக உறுதி அளிக்கப்பட்டது.இதையடுத்து. ஆப்கானிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலரை உதவித் தொகை, ஆப்கான் விமானப்படைக்கு 4 போர் ஹெலிகாப்டர் உள்ளிட்ட உதவிகளை வழங்கியது.இந்நிலையில், ஆப்கான் ராணுவத்தை சேர்ந்த பெண் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் முதல் முறையாக பயிற்சி அளித்து வருகிறது. இந்த பயிற்சி சென்னையில் உள்ள ராணுவ முகாமில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில், ராணுவத்திலிருந்து 17 பேரும், விமானப்படையில் இருந்து 3 பேரும், சிறப்பு படையில் இருந்து சிலரும், ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளை சேர்ந்த பல வீராங்கணைகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியில், தகவல் தொடர்பு, தலைமை பொறுப்பு, வெற்றி கொள்ள கையாளப்படும் வகை முறைகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுவதாக ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மன்பீரித் வோக்ரா தெரிவித்தார்.