குட்டி கரணம் அடித்தாலும் தமிழகத்தில் அது நடக்காது - திருமாவளவன்
பாஜக எத்தனை குட்டி கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
பெரும்பான்மை இல்லாத பட்சத்திலும், கர்நாடகாவில் பாஜக அரியணை ஏறியதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கர்நாடகா ஆளுநர் ஒருதலை பட்சமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது ஜனநாயக குரல் வலையை நெறிக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் ஆளுநர்களை மத்திய அரசு தனது கைப்பாவையாக செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இதேபோல, கர்நாடக ஆளுநரின் செயல் ஜனநாயக படுகொலை என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமானப்படுத்தும் செயல் எனவும் பாஜகவின் பதவி வெறிதான் இதற்கு காரணம் எனவும் டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com