ப்ளஸ் 2வில் 1024 மதிப்பெண் எடுத்த தினேஷ்.. கதறி அழுத மாடசாமி..

மதுப்பழக்கத்தில் இருந்து தந்தையை மீட்டெடுக்க தனது உயிரையே பணயம் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட தினேஷ் ப்ளஸ் 2வில் 1024 மதிப்பெண் எடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாடசாமியின் மகன் தினேஷ். ப்ளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில், தேர்வு முடிவுக்காக காத்திருந்த தினேஷ் தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் உயிருக்கே முடிவுக்கட்டினார்.

ஒரு நாள் கூட தவறாமல் குடித்துவிட்டு ரகளை செய்யும் தந்தையை பார்த்து பார்த்து வெறுப்படைந்தார் தினேஷ். எவ்வளவு கூறியும் தந்தை கேட்பதுபோல் இல்லை. அன்று முடிவு செய்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய என் தந்தையை மீட்டெடுக்க இது தவிர வேறு வழி இல்லை என்று நினைத்த தினேஷ், கடந்த 2ம் தேதி மேம்பாலம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

தற்கொலை செய்துக் கொண்ட தினேஷின் சட்டை பையில் இருந்த கடிதத்தில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும். என் சாவுக்குப் பிறகாவது என் தந்தை திருந்துவார் என நம்புகிறேன் ” என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

ப்ளஸ் 2 தேர்வுக்கு பிறகு மருத்துவர் ஆகும் கனவில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த தினேஷின் சடலத்தை கண்டு தந்தை மாடசாமி கதறி அழுதார். இனிமேல் நான் குடிக்கவே மாட்டேன் என்று சபதம் எடுத்து கதறினார். இந்த காட்சி பெறும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தினேஷின் ப்ளஸ் 2 மதிப்பெண் வெளியாகி பேரதிர்ச்சியை அளித்தது. ஆம், தினேஷ் ப்ளஸ் 2வில் 1200க்கு 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார் தினேஷ். இவ்வளவு நல்ல மதிப்பெண் பெற்ற என் மகனின் டாக்டர் கனவை சுக்குநூறாக உடைத்துவிட்டேனே என மாடசாமி மனமுடைந்து அழுதார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>