கல்யாண வயசு வந்துடுச்சேடி!-நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் வெளிப்படை
”எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சேடி” என வெளிப்படையாக தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாராவிடம் கோரிக்கை வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
'நானும் ரெளடி தான்' திரைப்படம் மூலம் ஹிட் அடித்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அந்தத் திரைப்படத்தில் கதாநாயகி நயன்தாராவுக்கும் காதல் என செய்திகள் பரவலாகப் பரவி வந்தாலும் காதல் ஜோடிகள் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆனால், அவ்வப்போது தாரா பொண்ணு வெளியிடும் புகைப்படங்கள் வைரல் லிஸ்டில் இடம்பெறாமல் இருக்காது. சமீபத்தில் இந்த காதல் ஜோடி வெளிநாட்டில் தங்கள் காதலைக் கொண்டாடியுள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்தேடி…வெய்ட் பண்ணவா…” என நயந்தாரா உடனான புகைப்படத்துடன் வெளிப்படையாகவே நயன்தாராவிடம் கல்யாணத்துக்கு நாள் குறிக்கத் தேதி கேட்டுவிட்டார்.
கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இப்பாடல் வரிகளை தனக்குச் சாதகமாக அமைத்த அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயனுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com