இந்த தாடி தான் அழகே..- ஸ்டைல் சீக்ரெட் சொல்லும் விராட்!
விராட் கோலி தனது அழகு குறித்து ரொம்பே மெய்சிலிர்த்துக் கொள்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் தான் மட்டும் முதலிடம் பெறாமல் தன் அணியையும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த அணிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக் கொண்டுவந்த சிறந்த கேப்டனாக அறியப்படுபவர் நம் இந்திய அணியின் நட்சத்திரக் கேப்டன் விராட் கோலி.
பெர்சனல், ப்ரோஃபெஷனல் என இரண்டிலும் சொல்லி அடிக்கும் கில்லியாக உள்ள நம்ம கேப்டன் விராட் கோலிக்கு தன் பிட்னெஸ் மீதும் அதிக அக்கறை இருக்கிறதாம். அதேபோல், தனக்கு எப்போதும் மெருகேறிய அழகைத் தருவது தனது முகத்தில் உள்ள தாடி தான் என்கிறார் விராட்.
தனது தாடி அழகு குறித்து விராட் கூறுகையில், “இந்த மாதிரி தாடி வளர்ப்பதில் பெரிய சிரமம் ஏதும் இல்லை. இது எனக்குப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக எண்ணெய் வைத்தால் போதும். தாடி பெரிதாக வளர்ந்தால் ட்ரிம் செய்வேன். ஆனால், மொத்தமாக மழித்துவிடமாட்டேன்” என தனது தாடி காதல் பகிர்ந்துள்ளார் விராட்.
இதுகுறித்து கோலியின் மனைவி அனுஷ்கா கூறுகையில், “தாடியை மழிப்பது அவரால் முடியாத செயல்” என்றுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com