விக்ரமின் சாமி-2 படத்தின் மோஷன் போஸ்டர்.. உள்ளே
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாக இருக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டில் வெளியான படம் சாமி. சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த படத்தின் மூலம் இயக்குனர், நடிகர், நடிகைக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.
இதனால், சாமியின் இரண்டாம் பாகம் எடுக்க ஹரி முடிவு செய்தார். அதன்படி, படத்தின் ஷ¨ட்டிங் தொடங்கி 80 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கிறார். மேலும், பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்ஜீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்த படம் விரையவில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாக ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
சாமி 2 படத்தின் மோஷன் போஸ்டர் இதோ..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com