காதலித்ததால் ஆத்திரம்: மகனின் கண்களை பிடுங்கி எடுத்த தந்தை
மகன் காதலித்ததால் ஆத்தரத்தில் மகனின் கண்களை கரண்டியால் நோண்டி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், நசீராபாத் பகுதியை சேர்ந்தவர் தோஸ்த் முகமது (70). இவரது மகன் அப்துல் பாகி (22). இவர், கல்லூரியில் படித்து வருகிறார்.
அப்துல் கல்லிரியல் தன்னுடன் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் அப்துலின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால், அப்துலின் தந்தையும் அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அப்துல் நான் காதலிக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வேன் என ஒற்றை காலில் நின்றுள்ளார்.
இதனால், மேலும் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து அப்துலை கட்டிப்போட்டு, கரண்டியால் இரண்டு கண்களையும் நோண்டி எடுத்துள்ளனர். இதனால், அப்துல் துடிதுடித்துப்போனார்.
சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து அப்துலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, இதுபோன்ற வெறிச்செயலில் ஈடுபட்ட அப்துலின் தந்தை மற்றும் 4 சகோதரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com