தளபதி மற்றும் நடிகையர் திலகம் கூட்டணியில்...தீபாவளி விருந்து!

நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 62’ திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் 62-வது படமாக அறியப்படும் இத்திரைப்படத்துக்கு இதுவரையில் பெயர் சூட்டப்படவில்லை. ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் இந்நாள் நடிகையர் திலகமாக அறியப்படும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனத் தயாரிப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபலங்களான ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். மேலும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முக்கிய வில்லத்தனமான வேடங்களில் ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர் என்பது கூடுதல் தகவல். மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>