100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்போம்: எடியூரப்பா உறுதி
சட்டமன்றத்தில் நளை பெரும்பான்மையை நிரூபிப்பதில் நூறு சதவீதம் உறுதியாக இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிகபட்சி தொகுதிகளில் வென்ற பாஜக ஆட்சியை பிடித்தது. பாஜக ஆட்சியமைக்க கவர்னர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, எடியூரப்பா முதல்வராக நேற்று பதவி ஏற்றார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்து கவர்னர் உத்தரவிட்டார்.
மேலும், எடியூரப்பா பதவி ஏற்றதற்கு எதிராக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டமன்றத்தில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.இதைதொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெரும்பான்மையை நிரூபிப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com