கலிபோர்னியாவில் போதகர் ஜெர்சன் எடின்ப்ரோவின் சிறப்பு ஆராதனை - Throne of Grace Ministries !
கிருபாசனம் ஊழியங்கள் (Throne of Grace Ministries) தெற்கு கலிபோர்னியாவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு அருகில் கடந்த 10 வருடங்களாக கிறிஸ்துவ மக்களிடையே இறை ஊழியத்தை நிறைவேற்றி வருகிறது.
அதுமட்டுமல்லாது பல தேவ ஊழியர்கள் இந்தியாவில் இருந்து அவ்வப்போது இங்கு கர்த்தருடைய ஊழியத்தைச் செய்துவருகின்றனர்.
அவ்வண்ணமாக, தேவ செய்தியாளர் ஜெர்சன் எடின்ப்ரோ அவர்கள் பங்கு பெற்று தேவ செய்தி அளிக்கும் சிறப்பு ஆராதனை இம்மாதம் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
போதகர் ஜெர்சன் அவர்கள், “எடின்ப்ரோ ஊழியங்கள்” மூலம் இறைதொண்டாற்றி அநேக இளம் வாலிபர்களை பாடல்கள் மற்றும் இறை செய்திகள் மூலம் இறைவனின் அன்பை உணரச் செய்துள்ளார்.
அதன்படி, சிறப்பு ஆராதனை வரும் 26-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணியளவிலும், 27-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவிலும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 2134 மைக்கல்சன் அவென்யூ, இர்வைன் (2134 Michelson Ave, Irvine, CA-92612) பகுதியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து, வரும் 27-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணிக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள 7357 ஜோர்டன் அவென்யூ கனகோ பார்க் (7357 Jordan Ave, Canoga park, CA-91303) என்ற முகவரியில் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com