சின்னத்திரைக்கு வருகிறார் நடிகர் விஷால்!
நடிகர் விஷால் விரைவில் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் வருகைக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதன் பின்னர் தான் எளிதாக மக்களைச் சென்றடைந்ததாக கமல்ஹாசன் கூறினார்.
இந்நிலையில், கமலைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் மக்கள் மனதில் இடம்பிடிக்க சின்னத்திரையில் கால் பதிக்க உள்ளார். ஒரு தனியார் தொலைக்காட்சியில் பிரபலங்களுக்கான ஒரு நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்க உள்ளார்.
இதுகுறித்து விஷாலும் உறுதி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகைகளைப் பேட்டியெடுத்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார் விஷால். மேலும் தன்னுடைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலத்துடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதியும் திரட்ட முடிவெடுத்துள்ளார்.
வெறும் சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சியாக இல்லாமல் மக்களுக்கு நலம் தருவதாகவும் இந்நிகழ்ச்சி அமைய வேண்டும் என்பது விஷாலின் விருப்பமாம்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com