`புல்டோசர் வைத்து ஏற்றிவிடுவேன்!- மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து

மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, `ஊழலில் ஈடுபடுபவர்களை புல்டோசர் வைத்து ஏற்றி விடுவேன்’ என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் அரசு சார்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்த சர்ச்சை மிகுந்த கருத்தைத் தெரிவித்துள்ளார் கட்கரி. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் செய்யும் ரோடு கான்டரக்டர்கள் குறித்து நிதின் கட்கரி பேசுகையில், `அரசிடம் ஒப்பந்தம் பெற்று சாலை போடும் ரோடு கான்ட்ராக்டர்கள், வேலை ஒழுங்காக நடக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வேலை மட்டும் ஒழுங்காக நடக்கவில்லை என்றால், அவர்களை புல்டோசருக்கு அடியில் போட்டு ஏற்றி விடுவேன்’ என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

ஊழல் செய்பவர்களுக்கு எதிராகத்தான் மத்திய அமைச்சர் பேசியுள்ளார் என்றாலும், தான் வகித்து வரும் பதவியைப் பொறுட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாக கருத்து கூறியுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>