இது காலா- நானா இடையேயான போட்டி...தி கிங் ஆஃப் தாராவி!
காலா திரைப்படத்தின் 'தி கிங் ஆஃப் தாராவி’ போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வந்த `கபாலி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் இரஞ்சித், ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.
அதை உறுதிபடுத்தும் பட்சத்தில் நடிகர் தனுஷின் `உண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் ரஜினி- இரஞ்சித் கூட்டணியில் படம் உருவாகப் போகிறது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து மின்னல் வேகத்தில் நடந்த ஷூட்டிங்கால், `காலா’ தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்டிரைக் காரணமாக தள்ளிப் போய்க்கொண்டிருந்தது `காலா’-வின் ரிலீஸ். இதையடுத்து, ஏப்ரல் 20-ம் தேதி, `காலா ஜூன் 7-ம் தேதி அனைத்து மொழிகளிலும் உலகெங்கிலும் வெளியாகும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காலா திரைப்படத்தில் நடிப்பில் சிறந்த நாயகர்களான ரஜினிகாந்த் மற்றும் நானா பட்டேகர் இருவருக்கும் இடையிலான நடிப்புப் போட்டியை கவுரவிக்கும் வகையில் தயாரிப்புக் குழுவினர் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
இதில், தாராவியின் மையத்தில் நானாவுக்கும் காலா ரஜினிக்கும் இடையேயான ஒரு யுத்தம் என்பதைக் குறிக்கும் வகையில் இப்போஸ்டர் வெளியாகியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com