ஒரே மேடையில் அன்புமணி, கமல்hellip கலகலக்கும் தமிழக அரசியல் களம்!
மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும், பாமக-வின் அன்புமணி ராமதாஸும் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
காவிரி மேலாண்மை அமைக்கும் வழக்கில் மத்திய அரசை உடனடியாக செயல்பட வலியுறுத்தி உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும், காவிரி தொடர்பான வழக்கையும் முடித்துவைத்துள்ளது நீதிமன்றம்.
இதையொட்டி இன்று சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், `காவிரி: நிரந்தரத் தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்’ என்ற கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தின் பிரதான கோரிக்கையாக, `மத்திய அரசு, காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும்’ என்று முன்மொழியப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தங்க தமிழ்செல்வன், அய்யாக்கண்ணு, பி.ஆர்.பாண்டியன், லட்சிய திமுக-வின் தலைவர் டி.ராஜேந்தர், நடிகர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எல்லாரையும்விட அன்புமணி ராமதாஸுக்கு இந்த மேடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. கர்நாடகாவில் மஜத ஒரு ராஜதந்திரியாக செய்லபடுவது போல, தமிழகத்தில் செயல்பட விரும்பும் கட்சி பாமக.
இந்நிலையில், கமல்- அன்புமணி ஒன்றாக அரசியல் களம் காண்பது புதிய கூட்டணி யுக்தியாகக் கூட இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com