என் அம்மா இல்லையே..- திருமண நேரத்தில் இளவரசர் ஹாரி உருக்கம்!
பிரிட்டன் இளவரசர் ஹாரி தன் திருமண நாளில் மறைந்த தன் தாயார் டயானாவை நினைவு கூர்ந்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவுக்கு பிறந்த இரண்டாவது மகனான ஹாரிக்கும் அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லே-வுக்கு நேற்று சனிக்கிழமை பிரிட்டனில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
இத்திருமண விழாவில் தன் தாய் டயானாவின் நகைகளுள் இருந்த மோதிரத்தையே தன் காதல் மனைவி மார்க்லேவுக்கு திருமண மோதிரமாக அணிவித்து மகிழ்ந்துள்ளார் இளவரசர் ஹாரி.
சகோதரர்கள் வில்லியம்ஸ்- ஹாரி இருவருமே தங்கள் தாய் டயானாவின் நினைவு இல்லாமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டதில்லை. இளவரசர் வில்லியம்ஸ் கூட தன் திருமண மோதிரமாக கேட் மிடில்டனுக்கு தன் தாய் டயானாவின் மோதிரத்தையே அளித்திருந்தார்.
தன் ஃபேஸ்புக் பக்கத்தில், தன் தாயாருடன் எடுத்துக்கொண்ட சிறு வயதுப் புகைப்படத்தையும் ஹாரி பகிர்ந்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com