ரஜினி கர்நாடகா பக்கம் கொஞ்சம் வாருங்கள்- அழைக்கும் குமாரசாமி!

”ரஜினிகாந்த் கர்நாடக பக்கமும் வந்து மக்களையும் விவசாயிகளையும் சந்திக்க வேண்டும்” என கர்நாடகாவின் முதல்வராகப் பதவியேற்க உள்ள குமாரசாமி அழைப்புவிடுத்துள்ளார்.

கடந்த 15-ம் தேதி கர்நாடக தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லாத போதும், ஆளுநர் அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், வாக்கெடுக்குப்புக்கு முன்னரே பதவி விலகினார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. இதையடுத்து, காங்கிரஸ்-மஜத கூட்டணியின் சட்டமன்றத் தலைவர் குமாரசாமி இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார். 

இந்நிலையில், நேற்று மகளிரணியைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்தும் காவிரி விவகாரம் குறித்தும் பேசினார்.

அவர் கூறுகையில், “காவிரி விவகாரத்தில் அமைய உள்ள கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>